Saturday, September 4, 2010




பயனுள்ள இணையப்பக்கங்கள்


இது ஒரு இந்திய blogspot வலைப்பின்னலாகும். இது கணனி, செல்பேசி மற்றும் நவீன தொழிநுட்பத்திலேற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தருவதுடன் பல அரிய மென்பொருட்கள், Java போன்ற மென்பொருள் மொழிகள் போன்றவற்றை மென்புத்தகவடிவில் தருகின்றது.


இங்கு சகல விதமான புத்தகங்களும் அவ்வகைக்குரிய தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டு மென்புத்தகமாக தரப்பட்டுள்ளன. குறிப்பாக கணனி, முகாமைத்துவம், எந்திரவியல் ஆகிய துறைகளுக்குரிய புத்தகங்களை “Rapidshare”,”Easy share” ஆகிய இணையத்தளங்களின் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.


“Pdf” Search engines

http://www.rapidshare.com

இது சகலவிதமான மென்பொருட்களையும் மென்புத்தகங்களையும் கொண்ட பாரிய இணையக்களஞ்சியமாகும். தேவையான மென்புத்தகத்தையோ அல்லது மென்பொருட்களையோ தரவிறக்கம் செய்ய Google ல் புத்தகம் அல்லது மென்பொருளின் பெயருடன் மேற்குறிப்பிட்ட இணையத்தின் பெயருடன் இணைத்து தேடுவீர்களேயானால் “Philip kotler” ன் “Principles of marketing ((2ndedition) போன்ற அரிய புத்தகங்களைப் பெறலாம். இது உண்மையில் சட்டமுரணானதெனினும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் வாழும் சாதாரண தர மக்கள் தமது கல்வியை மேம்படுத்த உதவும் என்பதில் ஜயமில்லை.

Research articles
இவற்றின் மூலம் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம் சம்பந்தமான ஆய்வுகளைத் தரவிறக்கம் செய்யலாம். இவை உயர்கல்வி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் பணத்திற்கும் மற்றும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.