Saturday, September 4, 2010




பயனுள்ள இணையப்பக்கங்கள்


இது ஒரு இந்திய blogspot வலைப்பின்னலாகும். இது கணனி, செல்பேசி மற்றும் நவீன தொழிநுட்பத்திலேற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தருவதுடன் பல அரிய மென்பொருட்கள், Java போன்ற மென்பொருள் மொழிகள் போன்றவற்றை மென்புத்தகவடிவில் தருகின்றது.


இங்கு சகல விதமான புத்தகங்களும் அவ்வகைக்குரிய தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டு மென்புத்தகமாக தரப்பட்டுள்ளன. குறிப்பாக கணனி, முகாமைத்துவம், எந்திரவியல் ஆகிய துறைகளுக்குரிய புத்தகங்களை “Rapidshare”,”Easy share” ஆகிய இணையத்தளங்களின் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.


“Pdf” Search engines

http://www.rapidshare.com

இது சகலவிதமான மென்பொருட்களையும் மென்புத்தகங்களையும் கொண்ட பாரிய இணையக்களஞ்சியமாகும். தேவையான மென்புத்தகத்தையோ அல்லது மென்பொருட்களையோ தரவிறக்கம் செய்ய Google ல் புத்தகம் அல்லது மென்பொருளின் பெயருடன் மேற்குறிப்பிட்ட இணையத்தின் பெயருடன் இணைத்து தேடுவீர்களேயானால் “Philip kotler” ன் “Principles of marketing ((2ndedition) போன்ற அரிய புத்தகங்களைப் பெறலாம். இது உண்மையில் சட்டமுரணானதெனினும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் வாழும் சாதாரண தர மக்கள் தமது கல்வியை மேம்படுத்த உதவும் என்பதில் ஜயமில்லை.

Research articles
இவற்றின் மூலம் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம் சம்பந்தமான ஆய்வுகளைத் தரவிறக்கம் செய்யலாம். இவை உயர்கல்வி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் பணத்திற்கும் மற்றும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.


Friday, April 30, 2010


பயன் மிகு காவிச்செல் மென்பொருள்
காவிச் செல் மென்பொருள் என்பது கணனியில் நிறுவாமலேயே, தன்னிச்சையாக இயங்கக்கூடிய மென்பொருளாகும். இவற்றை பொதுவாக “pendrive”, “Cd” களிலிருந்து உபயோகிக்கமுடியும். இவை கணனி “registry”ல் தம்மை பதிவு செய்வதில்லை பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட ஒழுங்கமைக்கும் கோப்பு (Configuration files) களில் தம்மைப் பதிவு செய்து கொள்ளும். அத்துடன் இவை இயங்கத்தொடங்கும் போது தேவையான கோப்புகளை கணனி “Windows” உடன் இணைத்து தற்காலிகமாக இயங்க வைக்கும்.
இன்றைய உலகில் வளர்ந்து வரும் புத்தம் புதுத்தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பதில் தொழிநுட்பம் ஆற்றிவரும் பங்களிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது இக் “காவிச் செல் மென்பொருட்களாகும்”. அன்றாட வணிக மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான “MS Office, Photoshop” போன்ற மென் பொருட்கள் உங்கள் கணனியில் நிறுவியிருக்காத பட்சத்தில் நீங்கள் அதனை நிறுவ வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் இக் காவிச்செல் மென் பொருட்களை நிறுவாமலேயே உங்கள் “Pendrive” இலிருந்தே உபயோகிக்க முடியும். இதன் மூலம் தேவைப்படுமிடத்திற்கெல்லாம் இவற்றைக் காவிச் செல்ல முடிவதுடன், ஒவ்வொரு கணனியிலும் நிறுவ வேண்டிய தேவையும், நேரமும் குறைவடைகிறது. இவை தனியே “MS Office, Photoshop” போன்றவற்றிற்கு மட்டுமன்றி “Anti virus, Nero” போன்ற எண்ணற்ற மென்பொருட்களிற்கு பிரதியீடாக வரத்தொடங்கியூள்ளன. இக் காவிச்செல் மென்பொருட்கள் மிகவும் பிரபலமானதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்,
1. இவற்றை முறையாக கணனியில் நிறுவத்தேவையில்லை அத்துடன் Pen drive இலிருந்தே இயக்க முடிவதுடன் பலதரப்பட்ட கணனிகளில் பயன்படுத்தலாம்.
2. குறைந்த அளவைக்;(Size) கொண்டிருப்பதால் எளிதாக Pendrive ல் காவிச்செல்லக்கூடியதாக இருக்கும்
3. பாவித்த பின் இவற்றை “Close” பண்ணும் போது தற்காலிக கோப்புக்கள், பதிவுகள் (Registry) தானாகவே அற்றுப்போவதால் கணனியின் இட அளவு அதிகரிக்கிறது.
4. நேரம் குறைவடைவதுடன் இவை இலவசமாகக்கிடைப்பதால் பதிய வேண்டிய அவசியமில்லை.
5. ஏறக்குறைய மடிக்கணனிபோல் உங்கள் “Pendrive”ஐ பயன்படுத்தலாம்.
இம்மென் பொருட்கள் தனித்தனியாகவும், கோர்வையாகவ்வம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது “Word”இனை தனியானவூம் “Portable office”ல் மற்றைய மென்பொருட்களாகிய “Access”, “Excel” உடன் சோர்த்தும் பெற்றுக் கொள்ளலாம். இவற்றினை கீழ் வரும் இணையத்தளங்களை சொடுக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
1. http://www.pendriveapps.com/
2. www.portablefreeware.com/
3. www.portableapps.com/
4. www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/
5. http://portableappz.blogspot.com/
6. www.codyssey.com/products/codysafe.html

இவை “மூல மென்பொருட்களை (original software) விட “Facilities” குறைந்தவையாக இருந்தாலும் இனி வருங்காலங்களில் கணனியை ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை.